2013 ரமளான் நாள் 1 – அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா?
- TamilChristians Admins

- Jul 9, 2013
- 2 min read
அன்புள்ள அண்ணா,
உங்களுக்கு என் வணக்கங்கள்.
எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வேலை எப்படி இருக்கிறது?
நான் இந்தியாவில் இருக்கும் போது, உங்களோடு அனேக விஷயங்கள் பற்றி உரையாடினேன். இப்படி உரையாடும் போது, நீங்கள் அடிக்கடி வைத்த ஒரு குற்றச்சாட்டு என்னை அதிகமாக பாதித்தது. நீங்கள் வன்முறைகள் பற்றியும், இஸ்லாமிய போர்கள் பற்றியும் அதிகமாக பேசினீர்கள். முக்கியமாக, எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அனேக குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள்.
எனவே, இந்த ரமளான் மாதத்தில், உங்களோடு அனேக விஷயங்களை நான் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன். முக்கியமாக, எங்கள் இறைத்தூதர் புரிந்த போர்களில் உள்ள நீதியையும், நியாயத்தையும் உங்களுக்கு விளக்கப்போகிறேன். அதன் பிறகு நீங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கமாட்டீர்கள். நீங்கள் எந்த கேள்வியை கேட்டாலும் சரி, என்னால் உங்களுக்கு பதில் அளிக்கமுடியும்.
பத்ருப் போர் முதற்கொண்டு, உஹூத் போர், கைபர் போர் என்று எந்த போரைப் பற்றிக் கேட்டாலும், என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால், ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நீங்கள் திறந்த மனதுடன் நான் சொல்லும் விவரங்களை ஆராயவேண்டும். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்துக்கொள்வீர்கள்.
இதோ, இன்று ரமளான் முதல் நாள், நான் நோன்பு இருக்கிறேன். இது என்னுடைய இரண்டாவது ரமளான் ஆகும். இந்த முறை, நான் இஸ்லாம் விஷயத்தில் உங்கள் மீது வெற்றி கொள்வேன் என்று முழுவதுவாக நம்புகிறேன். உங்கள் கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
இப்படிக்கு,
உமரின் தம்பி
————————
அன்புள்ள தம்பிக்கு, உன் அண்ணன் உமர் எழுதும் கடிதம்.
உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
உன் உடல் நலம் எப்படி இருக்கிறது?
விசாவில் உள்ள குளறுபடியினால் சௌதியிலிருந்து 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்புவதாக கேள்விப்பட்டு நாங்கள் திடுக்கிட்டோம். அப்பா உன்னிடம் தொலைபேசியில் பேசிய பிறகு தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. உன்னுடைய விசாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நீ சொன்ன பிறகு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
இஸ்லாம் பற்றிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். கடந்த காலத்தில் இஸ்லாம் பற்றி உலக மக்களுக்கு இருந்த அறிவைவிட, இன்று இஸ்லாமிய அறிவு அதிகமாக உள்ளது. இணையம் வந்ததினால், உலகம் சுருங்கிவிட்டது, அறிவும் பெருகிவிட்டது. அறிய புத்தகங்களை படிக்க வெளிநாடுகளுக்குச் செல்லத்தேவையில்லை, பெரிய நூலகங்களைத் தேடிக்கொண்டு பட்டணங்களுக்குச் செல்லத் தேவையில்லை, நம் கைபேசியிலேயே உலக நூலகங்கள் அடங்கிவிடுகின்றது. என்னே முன்னேற்றம்! இதையெல்லாம் நான் ஏன் இப்போது உன்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நீ ஆச்சரியப்படலாம். காரணம் இல்லாமல், நான் இவைகளை உனக்கு எழுதவில்லை. முஸ்லிம் அறிஞர்கள் சொல்வது தான் உண்மை, அவர்கள் சொல்வதை இதர மக்கள் சரிபார்க்க முடியாது என்ற நம்பிக்கை ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், இன்றோ, அந்த எண்ணங்கள் மாறிவிட்டன. எனவே, நீ எவைகளை எழுதினாலும், அவைகளை சரி பார்க்க என்னால் முடியும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.
தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்களே, எழுத்து விவாதத்திற்கு வர பயப்படும் இந்த காலத்தில், நீ தைரியமாக முன்வந்து, நாம் இஸ்லாமிய போர்கள் பற்றி பேசுவோம் என்றுச் சொன்னது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. மேலும், நீ தெரிந்தெடுத்த தலைப்பு இருக்கின்றதே, இது மிகவும் ஆபத்தான தலைப்பு, எனக்கல்ல, உனக்கு! இந்த வருட ரமளான் மாதத்தில் உன் விருப்பத்தின்படியே நாம் இஸ்லாமிய போர்கள் பற்றி அலசுவோம்.
உன் ஆய்விற்கு உதவியாக இருக்கும்படியாக, சில விவரங்களை உனக்கு நான் இப்போதே தெரிவித்து விடுகிறேன்.
நீ உன் கடிதத்தில், பத்ருப் போர், கைபர் போர், உஹுத் போர் என்று குறிப்பிட்டு இருந்தாய். இந்த போர்கள் பற்றி நீ பதில் சொல்லத் தயார் என்றும் எழுதியிருந்தாய். ஆனால், முஹம்மதுவின் வன்முறைகள் (உன் கண்ணோட்டத்தில் போர்கள்), கீழ்கண்ட வகைகளைச் சார்ந்ததாக இருக்கிறது, எனவே, இவைகளைப் பற்றி நீ ஆராய்ந்து, விவரங்களை தயாராக வைத்துக்கொள் என்று உனக்கு அறிவுரை கூறுகிறேன்.
அ) தற்காப்புக்காக செய்த போர்கள் (Defense)
ஆ) வலியச் சென்று புரிந்த போர்கள் (Offence)
இ) தம்மை விமர்சித்தார்கள் என்ற காரணத்திற்காக தனிமனிதர்களை கொன்ற நிகழ்ச்சிகள்
ஈ) வியாபாரிகள் மீது தீடீர் தாக்குதல் புரிந்து பொருட்களை கொள்ளையிட்டு, வியாபாரிகளைக் கொன்ற வழிப்பறி கொள்ளைகள் (Raids)
மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் புரிந்த போர்கள், வழிப்பறி கொள்ளைகள், தனிமனிதர்களை கொல்லும் செயல்களின் எண்ணிக்கை எத்தனை என்று உனக்குத் தெரியுமா? தெரிந்துவைத்துக்கொள், உனக்கு அவைகள் பிரயோஜனமாக இருக்கும்.
உன்னை அடுத்த கடிதத்தில் நாளை சில கேள்விகளோடு சந்திக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அண்ணன்
உமர்


Looking For Love Online
No Trust
My Boyfriend Wants Space, How do I Get Him Back
Is Cohabitation Replacing Marriage?
Unconditional Love are Basic Tenets of Our Existence
Subtle Differences Between Men and Women Most Do Not Notice
The Five Best Ways Keep the Relationship Fires Burning
How Can I Get Back Together With My Ex Girlfriend?