top of page

அல்லாஹ் மூன்று நபர்களா? (ARE THERE THREE ALLAHS?)



அல்லாஹ், கலிமதுல்லாஹ் (அல்லாஹ்வின் வார்த்தை) மற்றும் ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஆவி).


இதன் அர்த்தம் ‘மூன்று அல்லாஹ்க்கள்’ என்றா? 


இப்போது கிறிஸ்தவத்திற்கு வருவோம்.


தேவன், தேவனின் வார்த்தை, தேவனின் ஆவி.


அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் வார்த்தையையும், அல்லாஹ்வின் ஆவியையும் சேர்த்துச் சொல்லும் போது “ஒன்று” என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால், தேவனையும், தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய ஆவியையும் சேர்த்துச் சொல்லும் போது மட்டும் “மூன்று” என்று ஏன் முஸ்லிம்கள் சொல்கிறார்கள்? 


கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது (சங்கீதம் 33:6)


தேவன் தம்முடைய வார்த்தை மற்றும ஆவியின் வல்லமையினால் உலகமனைத்தையும் படைத்தார்.


அடுத்தபடியாக,


அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; . . .  (யோவான் 1:14)


தேவனுடைய வார்த்தை = இயேசு


தேவனுடைய ஆவி = பரிசுத்த ஆவியானவர்


ஆக,


ஒரே தேவன் = தேவன் + தேவனுடைய‌ வார்த்தை + தேவனுடைய‌ ஆவி


ஒருவேளை முஸ்லிம்கள், தேவனும் அவருடைய வார்த்தையும், அவருடைய ஆவியும் சேர்த்து மூன்று என்று சொல்வார்களானால், அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய‌ வார்த்தையும், அல்லாஹ்வுடைய‌ ஆவியும் சேர்த்து மூன்று அல்லாஹ்க்கள் என்று சொல்வார்களா?

 
 
 

Comments


bottom of page