top of page

ஆரம்பகால கிறிஸ்தவத்தில் மற்றும் இஸ்லாமில் "வாள்" – ஓர் அறிமுகம்



Introduction to the Sword in Early Christianity and Islam

ஆசிரியர்: ஜேம்ஸ் அர்லண்டசன், Ph.D.

உலகளாவிய ஜிஹாத் (புனிதப்போர்) மற்றும் மேற்கத்திய நாடுகள் மேலான தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன, இதற்கு முடிவு என ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டாண சூழ்நிலைகளில் “நம்முடைய சரித்திரங்களையும், உலக சரித்திரத்தையும் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்” என்பது தான் அதி முக்கிய தேவையாக உள்ளது. இந்த தெளிவை பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரு வழி உண்டு அதாவது “நாம் பின்னுக்கு திரும்பி பார்க்கவேண்டும்” என்பதாகும், அதாவது சரித்திரத்தை அறிந்துக்கொள்ளவேண்டும்.

இந்த வரலாற்று நிகழ்வுகளும் அவைகளுக்கான விளக்கங்களும் ஏறத்தாழ ஒரே தன்மை உடையவைகளாக காணப்படுகின்றன, மற்றும் ஆங்காங்கே சில வித்தியாசங்களும் காணப்படுகின்றன. இந்த ஜிஹாதுக்கான விதைகள் ஆதி காலத்தில் இருந்தே விதைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விதைக்கப்பட்ட விஷங்களே இன்று துவேஷங்களாக வளர்ந்துள்ளன. ஜிஹாத்துக்கு எதிரான இராணுவ‌ பதிலடி நடவடிக்கைகளும் இன்று வளர்ந்து வந்துள்ளன. வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள மறுத்தால், நாம் எந்த தவறுகளை வரலாற்றில் செய்து இருந்தோமோ அவற்றையே திரும்ப செய்கிற துர்பாக்கிய நிலையில் நாம் இன்று தள்ளப்படுவோம். ஒரு வேளை வரலாறு வன்முறை நிறைந்ததாக காணப்பட்டாலும், அந்த வன்முறையிலிருந்து நம்மை சீர்திருத்திக்கொண்டு, நாம் வன்முறையில்லாமல் வாழ முயற்சி எடுக்கலாம் அல்லவா?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் வாளை எடுத்து போர் தொடுக்கவும் இல்லை மற்றும் கிறிஸ்தவ சபை வாள் எடுப்பதை அங்கீகரிக்கவும் இல்லை [1], மேலும் இதனை கொள்கையாக ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதன் பின்னர் கிறிஸ்தவர்களாக மாறிய ரோம ஏகாதிபத்திய சக்கரவர்த்திகளின் காலத்தில் இக்கொள்கை மாறியது. இதன் பின் வந்த திருச்சபை தன்னுடைய உண்மையான வழியிலிருந்து விலகிவிட்டதா? அல்லது இந்த புதிய கொள்கையை பின்பற்ற ஆரம்பித்ததா?

சுமார் 1400 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை இஸ்லாம் வாளை சுழற்றியே வந்துள்ளது. வாளை பயன்படுத்தவேண்டும் என்ற இந்த கொள்கை இஸ்லாமுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? மெய்யான பாதையில் இருந்து இஸ்லாம் விலகியதா? அல்லது இஸ்லாமை வழி நடத்துச் சென்ற தலைவர்கள் இவ்வாள் சுழற்றும் கொள்கையை பின்பற்றினார்களா? ஒரு மார்க்கம் தனது மைய கொள்கைகளில் இருந்து வழி விலகுகிறதா இல்லையா என்பதை நாம் எப்படி உறுதி செய்துகொள்வது?

இயேசு கிறிஸ்துவும் முஹம்மதுவும் தங்களது மார்க்கங்களுக்கான மரபியல் கூறுகளை ஸ்தாபித்தனர், அடிப்படை கட்டளைகளை கொடுத்தனர். வன்முறை மற்றும் வாளை பயன்படுத்துவதற்கு அவர்கள் கொடுத்த‌ கொள்கை விளக்கங்கள் என்ன?

இந்த தொடர் கட்டுரைகள், 600 வருட கால இடைவெளியை கொண்டுள்ள கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் ஆரம்ப புள்ளிகளையும் மற்றும் இதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டு மார்க்கங்களை ஒப்பிட்டு இத்தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

  1. தேவனுடைய ராஜ்யத்துக்கும் சீசருடைய ஆட்சிக்கும் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த கொள்கை என்ன?

  2. இவ்விரண்டும் (ஆன்மீகம் மற்றும் அரசாங்கம்) தனித்தனியே வைத்து நிர்வாகிக்கப்படவேண்டுமா?

  3. மரணம் மற்றும் “அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகள்” பற்றி இயேசுவின் கருத்து என்ன?

  4. புனித நகரமாகிய‌ எருசலேம் மற்றும் அதிலுள்ள தேவாலயம் குறித்தும் அதன் அரசியல் ‍புவியியல் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும் இயேசுவின் நிலைப்பாடு என்ன‌?

  5. ஒருவேளை மதரீதியான ஒரு கோட்பாட்டை புனித ஸ்தலமான எருசலேமில் ஸ்தாபிக்க இயேசு முயன்று தோற்றாரா?

  6. இயேசு, ரோம இராணுவ அதிகாரியை சந்தித்த போது ரோம படைகளை குறித்து இயேசு கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?

  7. நற்செய்தி நூல்களில் வாளைப்பற்றிய குறிப்புகள் உண்டா?

  8. ஒருவேளை இருந்திருந்தால் அதை உபயோகிக்கும் நிலைகள் பற்றி இயேசு கூறுபவைகள் யாவை?

  9. நான் அமைதியை அல்ல, நான் பட்டயத்தை அனுப்பவே வந்தேன் என இயேசு சொன்னதன் நோக்கம் என்ன‌?

  10. இயேசு அமைதியை உண்டாக்கும் ஒரு சமரசவாதியா?

  11. ஒரு நாள் உலகத்தில் சமாதானம் நிச்சயம் நிலவும் அப்போது பட்டயங்கள் தேவைப்படாது என இயேசு நம்பினாரா?

  12. உலகம் ஒரு சமாதான இடமாக இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பினாரா? மற்றும் இப்படி நடக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்தாரா?

  13. பரலோக இராஜ்ஜியம் மற்றும் சீசரின் இராஜ்ஜியம் பற்றி ஆதிதிருச்சபை கொண்டிருந்த நிலைப்பாடு என்ன‌?

  14. ஆதி கிறிஸ்தவர்கள் பட்டயத்தை சுமந்து சென்றார்களா?

  15. அக்கால அரசாங்கங்கள் பட்டயம் வைத்திருக்க அனுமதி கொடுத்திருந்ததா? ஆதி கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களா? இல்லையா?

  16. ஆதி கிறிஸ்தவர்கள் ஏன் அதிகம் துன்புறுத்தப்பட்டனர்?

  17. ஆதி கிறிஸ்தவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ‘தீவிரவாத குழுக்களை’ உருவாக்கிக்கொண்டார்களா?

  18. கிறிஸ்தவம் யூத மதத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே, இப்படி இருக்கும் போது, யூதர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே உறவு எப்படி இருந்தது? மற்றும் யூதர்களுக்கும் ஆதிகால கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவு எப்படி இருந்தது?

  19. இயேசுவும் அவரது சீடர்களும் யூதர்களை துன்பப்படுத்தினார்களா? “ஆன்டி-செமிடிக் (Anti-Semitic)” என்றுச் சொல்லக்கூடிய, யூத எதிர்ப்பு குழுவாக இயேசுவும், அவரது சீடர்களும் செயல்பட்டார்களா?

  20. இயேசுவும் அவரது ஆரம்ப கால சீடர்களும் எவ்வாறு ரத்தம் சிந்தி மரித்தனர்? அவர்கள் தங்களை தாக்கியவர்களை பட்டயங்களால் தாக்கவில்லையா?

  21. இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு வாள் அல்லது தற்கால ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதியுண்டா?

  22. கிறிஸ்தவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்கலாமா?

  23. தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் திருச்சபைக்கும் பட்டயம் குறித்ததான கொள்கை முரண்கள் உள்ளனவா?

  24. இக்கால கட்டத்தில் யுத்தம் மற்றும் சமாதான காலங்களில் திருச்சபையின் நிலைப்பாடு என்ன?

  25. இன்றைய சூழலிலும் திருச்சபையானது ‘மறு கன்னத்தை’ காண்பிக்கச் சொல்லி அரசாங்கத்திற்கு அறிவுரை கூறுகின்றதா?

  26. காவல்துறை மற்றும் ராணுவத்தில் கிறிஸ்தவர்கள் சேர அனுமதியுண்டா?

  27. அப்படி அனுமதி இருப்பின், போரில் சிலரை கொல்லும்படி வந்தால் என்ன செய்வார்கள்? “உங்களை பகைக்கிறவர்களை நேசியுங்கள்” என்ற கொள்கையை மீறும்படியாக ஆகிவிடாதா?

  28. ஒருவேளை வன்முறையாளர்களிடம் இருந்து, தீவிரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவர்களை பாதுகாக்க அரசாங்கம் தவறினால் அப்போது கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இஸ்லாம் பற்றிய கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முயல்கிறோம்:

  1. முஹம்மது எப்போதாவது சமாதான பாதையில் சென்றிருக்கிறாரா? அல்லது எப்போதுமே யுத்தம் செய்துக்கொண்டே இருந்தாரா?

  2. பட்டயத்தை பற்றிய முஹம்மதுவின் கொள்கை என்ன?

  3. கருப்புக்கல் வைக்கப்பட்டு இருக்கும் புனித ஸ்தலமான மக்காவில் உள்ள காபா பற்றி முஹம்மதுவின் கருத்து என்ன?

  4. சமாதானம் அல்லது வன்முறை என்ற இரு பாதைகளில் செல்ல அவருக்கு வாய்ப்பு இருந்ததா? அல்லது இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருந்ததா?

  5. போர் பற்றிய‌ அனேக வசனங்கள் குர்‍ஆனில் ஏன் காணப்படுகிறது?

  6. குர்‍ஆனில் உள்ள போர் சம்பந்தப்பட்ட வசனங்கள் கலாச்சாரம் மற்றும் வரலாற்று எல்லைகளுக்கு உட்பட்டதா? அவற்றுக்கு காலாவதி தேதி என ஏதாவது உண்டா?

  7. குர்‍ஆனில் சமாதானம் மற்றும் அமைதி சம்மந்தப்பட்ட வசனங்கள் உள்ளனவா?

  8. “ஜிஹாத்” என்றால் உண்மையில் அர்த்தம் என்ன?

  9. “கிதல் – Qital” என்ற‌ வார்த்தையின் அர்த்த‌ம் என்ன?

  10. ஜிகாத் எனும் புனித‌ப்போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் ஆரம்ப கால இஸ்லாமில் இருந்ததா?

  11. அப்படி கேற்கண்ட சட்டங்கள் இருந்திருக்குமானால்? அவை யாவை?

  12. ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து முஹம்மது என்ன‌ நினைத்திருந்தார்?

  13. யூத‌ர்க‌ளுட‌னான‌ முஹம்மதுவின் உற‌வு எப்ப‌டி இருந்த‌து?

  14. அவ‌ர் ம‌ரித்த‌ பின்பு எப்ப‌டி ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் அவ‌ர‌து கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர்?

  15. ஆர‌ம்ப‌ கால‌ முஸ்லீம்க‌ள் போர் தொடுத்தார்க‌ளா?

  16. குர்‍ஆனையும் முஹம்மதுவையும் எங்ஙண‌ம் அவ‌ர்க‌ள் பின்ப‌ற்றினார்க‌ள்?

  17. ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாம் நீதியை (Justice) எப்ப‌டி வ‌ரைய‌றுக்கிற‌து?

  18. ம‌ர‌ண‌ம் ம‌ற்றும் வரி செலுத்துதல் குறித்து ஆரம்ப கால இஸ்லாமியர்களின் கருத்து என்ன?

  19. மார்க்க‌த்திற்காக‌ உயிர்விடுத‌ல் அல்ல‌து இர‌த்த‌ சாட்சிக‌ள் குறித்து இஸ்லாம் போதிப்ப‌து என்ன?

  20. இஸ்லாமை சீர்திருத்த முடியுமா? சீர்திருத்த முடியுமென்றால், அதனை அடைவது எப்படி?

  21. சீர்திருத்தம் தேவை என்று இஸ்லாம் நினைக்கிறதா? “உண்மைக்கு” சீர்திருத்த‌ம் தேவைப்படுமா?

இவ்விரு மார்க்கங்களின் வரலாற்று பிண்ணனியங்களை ஆராய்வதன் மூலமும், மேற்கண்ட கேள்விகளுக்கு இப்பிண்ணனியங்கள் வாயிலாக விடைகாண விழைவதுமே நாம் தெளிவடைய ஒரே வழியாகும். இந்த தெளிவை நாம் அடைந்தால் தான் “நாம் எவைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்ற முடிவை எடுக்க முடியும்

இவ்விரு மார்க்கங்களையும் தலைப்பு ரீதியாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றை வைத்து ஆராய்வோம். இவ்விரு மார்க்கங்களின் சில தலைப்புக்கள் ஒரே கட்டுரையிலும் ஒப்பிடப்பட்டு இருக்கும்.

இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுக்கு இதன் வாயிலாக ஏதாவது நல்லுறது ஏற்பட வழியுண்டா?

இவ்விரு மார்க்கங்களின் மரபியல் கூறுகளை (அடிப்படை கட்டளைகளை) அதன் மூலத்திலிருந்தே ஆராய ஆரம்பிப்போம்.

இந்த தொடர் கட்டுரைகளின் பட்டியல்

பின் குறிப்பு:

[1] இந்த தொடர் கட்டுரைகளில் “பட்டயம்” அல்லது “வாள்” என்ற வார்த்தையானது, எல்லா வகையான ஆயுதங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இக்காலத்தில் வன்முறைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் இதில் அடங்கும். மேலும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்துதல், யுத்தம் செய்தல், கொலை செய்தல், வன்முறையில் ஈடுபடுதல் மேலும் தற்காப்பிற்காக வாளை பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.


© Answering Islam, 1999 – 2012. All rights reserved.

 
 
 

Comments


bottom of page