இஸ்லாமை பயன்படுத்தி முஸ்லிம்களை சிந்திக்கச் செய்வது எப்படி? (Using Islam to vet Muslims)
- TamilChristians Admins

- Mar 18, 2017
- 2 min read
முஸ்லிம்களை சிந்திக்கச் செய்ய இஸ்லாம் பற்றி அவர்களிடம் பேசாதீர்கள், அதற்கு பதிலாக இஸ்லாமின் கனிகள் பற்றி பேசுங்கள். உதாரணத்திற்கு, ‘மனைவியை அடித்தல்’ பற்றி என்னை நினைக்கிறீர்கள் என்று கேட்கலாம். இஸ்லாமுக்காக பேசும் எந்த ஒரு அறிஞனும் மனைவிகளை அடிப்பதை அங்கீகரிக்கமாட்டான். ஆனால், குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மனைவிகளை அடிக்கலாம் என்ற போதனை காணப்படுகின்றது.
குர்ஆன் 4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். . . . எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – . . .
Dawood #2142 Umar reported the prophet as saying: “A man will not be asked as to why he beats his wife”.
அபூ தாவுத் எண் 2142 (ஆங்கில எண்):
உமர் அறிவித்ததாவது: இறைத்தூதர் அவர்கள் “ஒரு ஆண் தன் மனைவியை அடித்தால், ஏன் அடித்தாய் என்று அந்த ஆணை கேள்வி கேட்கக்கூடாது” என்று கூறினார்கள்.
மனைவியை அடிக்கும் இந்த கோட்பாட்டை நான் எதிர்க்கிறேன். இந்த நாட்டில் (அமெரிக்காவிற்கு) இடம் பெயர்ந்து வந்தவர்கள் அல்லது இங்கு வாழும் முஸ்லிம்கள் மனைவிகளை அடிப்பவர்களாக இருந்தால், இப்படிப்பட்டவர்கள் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்க நான் விரும்பமாட்டேன்.
இஸ்லாமிய கோட்பாடுகள் கீழ்கண்டவைகளை ஆதரிக்கின்றது:
அடிமைகளை வைத்திருப்பது,
கொடுமைப்படுத்துவது,
ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காஃபிர்கள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது,
மனைவியை அடிப்பது,
பெண்கள் தாழ்வானவர்கள் என்று கருதுவது,
ஆட்சி அதிகாரத்தை ஆதாரமாக காட்டி பல படுகொலைகள் புரிவது
இவைகள் அனைத்தையும் நான் புறக்கணிக்கிறேன். நான் முஸ்லிம்களை புறக்கணிக்கிறேன் என்றுச் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். மேற்கண்ட தீய பழக்கங்களை மட்டுமே நான் புறக்கணிக்கிறேன்.
எனவே, உங்களிடம் தாவா செய்யும் முஸ்லிமிடம்: நீங்கள் மனைவியை அடிப்பதை ஆதரிக்கிறீர்களா? கொலை செய்வதையும், இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களை கொல்லுவதையும் ஆதரிக்கின்றீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்
அவர் ஒன்றும் பேசாமல் இருந்தால், 'உங்களிடம் குர்ஆனின் ஹதீஸ்களிலிருந்து மேற்கோள் காட்டுவதற்கு விவரங்கள் ஞாபத்துக்கு வரவில்லையென்றால், கூகுள் இமாமை கேட்டுப்பாருங்கள்' என்றுச் சொல்லுங்கள். நான் மேலே குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் விவரங்கள் எனக்கு கூகுளில் சில வார்த்தைகளை தேடும் போது கிடைத்துவிட்டது. இதற்கு முன்பு, இப்படிப்பட்ட விவரங்கள் புத்தகங்களில் தேடவேண்டுமென்றால், நமக்கு அதிக நேரம் பிடிக்கும். ஆனால், குர்-ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் தற்காலத்தில் மேற்கோள்கள்களை தேடுவது சுலபமாகிவிட்டது.
மனைவியை அடிப்பதை ஆதரிக்கின்ற, காஃபிர்களை மிகவும் கேவலமான மனிதர்களாக பார்க்கின்றன, கொலைகள் செய்வதை ஆதரிக்கின்றவர்களை ஏன் நம் நாட்டில் அனுமதிக்கவேண்டும்?
எனவே, தாவா செய்பவர்களிடம் முஸ்லிம்களிடம் இஸ்லாமின் கனிகள் பற்றி பேசுங்கள். உங்கள் முஸ்லிம் அறிஞர்களிடம், மனைவிகளை அடிக்கும் இந்த தீய பழக்கம் சரியானது என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள். பேசும் போது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேசுங்கள், இஸ்லாமின் கனிகள் பற்றி மட்டுமே பேசுங்கள்.
இப்படிப்பட்ட தீய கோட்பாடுகளை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று முஸ்லிம்களிடம் கேட்பது நியாயமானதாக இருக்குமா? நியாயமாக இருக்காது என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் அவ்விதமான கோட்பாடுகள் தீயவை என்று ஒப்புக்கொள்வார்களா?
ஆசிரியர்: பில் வார்னர் (Bill Warner)
ஆசிரியர் இந்த தலைப்பு பற்றி பேசும் வீடியோவை இங்கு காணலாம் (ஆங்கிலம் – 4:49 நிமிடங்கள்): https://www.youtube.com/watch?v=5ew8PspLhZQ


Comments