top of page

கண்களுக்கு தெரியாத அல்லாஹ் காணப்படுவானா?



கண்களுக்கு தெரியாத அல்லாஹ் நாம் காணும்படி அவன் வெளிப்படுவானா?


இக்கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன:  ஆம் (அ) இல்லை


இல்லை, அல்லாஹ்வை பார்க்கமுடியாது' என்பது உங்கள் பதிலாக இருந்தால், இதன் அர்த்தமென்ன தெரியுமா? அல்லாஹ் சர்வ வல்லமையுள்ள இறைவன் அல்ல என்பதாகும். அவன் ஒரு பலவீனமான, குறைபாடுள்ள இறைவனாக இருக்கிறான். ஏனென்றால், அவன் உருவாக்கிய தேவ தூதர்களுக்கு இருக்கின்ற வல்லமை கூட அவனுக்கு இல்லை, அதாவது மலக்குகள் என்றுச் சொல்லக்கூடிய தேவதூதர்கள் மனித வடிவில் காணப்படுவார்கள், அதே நேரத்தில், தங்களின் உண்மை நிலையை(தெய்வீகத் தன்மையை) இழக்கமாட்டார்கள். ஆனால், அல்லாஹ் இவர்களை விட பலவீனமானவன் என்று நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்று அர்த்தமாகின்றது.


ஒருவேளை நீங்கள் ‘ஆம், அல்லாஹ்வினால் காணப்படமுடியும்' என்றுச் சொல்வீர்களென்றால், நீங்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அது என்ன பிரச்சனை? இதனை கவனியுங்கள். அல்லாஹ் ஒரு தனி ஆள், ஏகத்துவ இறைவன்.  அவன் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு மக்கள் காணப்படும் படி இறங்கி வருகிறான் என்று தானே இதன் பொருள் (பார்க்கமுடியாத நிலையில் இருப்பவன், பார்க்கும் நிலையில் வருகிறான்).


உங்களின் கூற்றின்படி, ஒருவேளை அல்லாஹ் ஒரு மனித உருவில் தன்னை ஒரு நிமிடம் மட்டும் மாற்றிக்கொண்டு பூமியில் வந்துவிட்டால், அவன் அண்டைவெளியில் இருக்கமுடியாது. அதாவது நேரம் மற்றும் இடத்தை (Time and Space) கடந்து கடவுள் என்ற நிலையில் அவன் வானத்தில் இருக்கமாட்டான். இதனால், அவன் ஒரு நித்தியமானவனாக, சர்வ வல்லவனாக, சர்வ ஞானியாக, சர்வ வியாபியாக இருக்கமுடியாது. அல்லாஹ் மனிதனாக இருந்த அந்த ஒரு நிமிடம், உலகிற்கு இறைவன் என்பவன் இருக்கமாட்டான், என்பது தான் இதன் அர்த்தம். (இறைவன் இல்லாமல் இவ்வுலகம் ஒரு நிமிடமாவது இயங்குமா?!)


இது தான் தவ்ஹீத் (ஏகத்துவம்) பற்றிய முஸ்லிம்களின் புரிதல்.


ஆனால், பைபிளின் தேவனுக்கு இந்த பிரச்சனை இல்லை. யெகோவா என்ற ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் ஒருவரே ஆவார், ஆனால் மூன்று ஆள்தத்துவத்தில் இருக்கிறார்.


[ஒரு சிறிய உதாரணம். பிரபஞ்சம் (Universe) என்பது மூன்று காரியங்களை உள்ளடக்கியது காலியிடம், நேரம் மற்றும் பொருள் (The universe is made up of space, time and matter). இம்மூன்றைக் கொண்டு இருந்தாலும், நாம் அதனை ஒரு பிரபஞ்சம் என்றே அழைக்கிறோம், மூன்று பிரபஞ்சங்கள் என்று அழைப்பதில்லை. யூனிவர்ஸ் (Universe) என்ற பதத்தில் உள்ள ‘Uni’ என்பதற்கு ஒன்று என்று பொருள். எந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டாலும், இம்மூன்றைக் கொண்டு தான் அது  இருக்கும்.]


யெகோவா என்பவர் ஒரு தேவனாவார் ~ அவர் மூன்று ஆள்தத்துவங்கள் கொண்டுள்ளார், பிதாவாகிய தேவன், குமாரனாகிய (வார்த்தையாகிய) தேவன், மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய தேவன். 


நித்தியமான, ஒருவரும் பார்க்கமுடியாதவராகிய வார்த்தையாகிய தேவன், மனித வடிவில் மாறி தான் உண்டாக்கிய உலகில் வந்தார். இந்த வகையில் “பார்க்க முடியாத” நிலையில் இருக்கும் தேவன் “பார்க்கும்” நிலையில் தன்னை வெளிப்படுத்தினார்.


பிதாவாகிய தேவன் தம்மை மனிதன் பார்க்கும் படி, தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.  அவர் நித்தியமானவராகவே, சர்வ வல்லவராகவே, சர்வ ஞானியாகவே, சர்வ வியாபியாகவே இருந்து, தம்முடைய வார்த்தையாகிய தேவனை மனித ரூபமெடுத்து பூமியில் இயேசுவாக காணப்படும்படி அனுப்பினார். அதன் பிறகு அந்த வார்த்தையாகிய தேவன் (பூமியில் அவருக்குப் பெயர் இயேசு) 33 ஆண்டுகள் தான் வந்த சரீரத்தில் வாழ்ந்து, மறுபடியும் தான் விட்டு வந்த இடத்திற்கே சென்றுவிட்டார்.


இப்படி அல்லாஹ்வினால் செய்யமுடியாது, ஏனென்றால், அவர் பூமியில் மனித வடிவில்  இறங்கிவிந்துவிட்டால், மேலேயிருந்துக்கொண்டு யார் உலகை ஆளவது?

இயேசுவின் மனித அவதாரத்தை முஸ்லிம்களால் புரிந்துக்கொள்ள முடியாது என்பதில் ஆச்சரியமில்லையே!


ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1)


அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:14)


பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:12-13)


அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். (யோவான் 14:6,7)

ஆங்கில மூலம்: CAN THE INVISIBLE GOD BECOME VISIBLE?


 
 
 

Comments


bottom of page