top of page

சவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?





முதலாவதாக, கடந்த காலத்தில் கிடைத்த கையெழுத்து பிரதிகளில், தொல்லியல் கண்டுபிடிப்புகளில், இந்த சவக்கடல் கண்டுப்பிடிப்பு தான் மிகவும் பெரியது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், ஒரே இடத்தில் 900க்கும் அதிகமான சுருள்கள் கிடைத்திருப்பதினால் இந்த முக்கியத்துவம்.


இரண்டாவதாக,  இச்சுருள்கள் கி.மு. 250க்கும் – கி.பி 68க்கும் இடைப்பட்ட காலத்துக்குட்பட்டதென்பதால், இதைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ள அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். கிறிஸ்துவிற்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுருள்களும் இங்கு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.  


மூன்றாவதாக, இச்சுருள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. 1947ம் ஆண்டில்  முதலாவது ஒரு குகையில் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு தொடர்ச்சியாக 1956வரை பதினோறு குகைகளில் பல ஆயிர கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 


நான்காவதாக, 1956 வரை கண்டுபிடிக்கப்பட்ட பிரதிகள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக, அறிஞர்களின் ஆய்விற்காக உடனே வெளியிடப்படவில்லை. ஆய்வுகள் இன்னும் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தினார்கள், இதனால் சவக்கடல் சுருள்களின் ஆய்வில் ஈடுபடாத அறிஞர்களின் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இதைப் பற்றி விவரமாக இன்னொரு தொடரில் காண்போம். 


ஐந்தாவதாக, அனைத்து சுருள்களும் வெளியிட தாமதமானபடியினால், பல அறிஞர்கள் பல வகையாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவ உலகம் சவக்கடல் சுருள்களின் உண்மைகளை மறைக்க முயலுகின்றது என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணத்திற்கு, பேராசிரியர் ராபர்ட் ஹெச் ஐஸன்மேன் போன்றவர்கள் புதிய கருத்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானது.


ஆறாவதாக, கிறிஸ்தவ அறிஞர்களின் மத்தியிலும் சுவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இயேசுக் கிறிஸ்து பற்றி ஏதாவது விவரங்கள் இச்சுருள்களில் கிடைக்குமா? என்ற ஆர்வத்தில் கிறிஸ்தவ அறிஞர் உலகம் காத்துக்கொண்டு இருந்தது. 


கடைசியாக, இஸ்லாமிய அறிஞர்களின் உலகம் பற்றி சொல்லியாக வேண்டும். கிறிஸ்தவத்திற்கு எதிராக புதிய கருத்துக்களைச் சொல்லும் ஐஸன்மேன்  போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு சக்கரைக்கட்டியாக இனித்தது. சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை மெய்ப்படுத்துகிறது என்று முஸ்லிம்கள் அறியாமையில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், அதை இன்றுவரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதைப் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் விவரமாக காண்போம்.


மேற்கண்ட காரணங்களுக்காக, சவக்கடல் சுருள்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பும், எதிர்ப்பும் அதிகமாகிகொண்டே இருந்தது என்றுச் சொல்லலாம். 

தேதி: 31st Oct 2016


 
 
 

Comments


bottom of page