top of page

முஸ்லிம்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்



(ஆலன் அவர்களின் கடிதம் – ஆகஸ்ட் 2009)


அன்பு நண்பரே,


தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் ஒரு நபரை நிறுத்தி,  அவரிடம் ‘நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்கு பைபிள், இறைவன் மற்றும் மதம் பற்றி’ உரையாடுவதற்கு விருப்பமுண்டா? என்று கேட்டுப்பாருங்கள். உடனே அவர் ‘இல்லை, எனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லிவிட்டு அமைதியாக நழுவிவிடுவார் (அல்லது திட்டிவிடுவார்).


ஆனால், இதே  கேள்வியை ஒரு முஸ்லிமிடம் கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு வேறு ஒரு பதில் நிச்சயம் கிடைக்கும். நான் ஒரு முறை, எங்கள் பகுதியில் வாழும் முஸ்லிம்களிடம், இன்னொரு முறை முஸ்லிம்கள் கூடும் சந்தைக்கு (அரப் பஜார்)  சென்று, இரண்டு முஸ்லிம்களிடம் பேச்சு கொடுத்தேன். அவர்களிடம் ‘நான் ஒரு கிறிஸ்தவன், நீங்கள் பைபிள், இறைவன், மதம் போன்றவைகள் பற்றி பேச விரும்புவீர்களா?’ என்று கேட்டேன். உடனே ‘ஓ.. ரொம்ப சந்தோஷம், உட்காருங்கள் நாம் பேசுவோம்’ என்று எனக்கு பதில் வந்தது. நானும் அவர்களோடு உட்கார்ந்து இரண்டு மணி நேரம் தேவன், பைபிள், இயேசு மற்றும் இஸ்லாம் பற்றி பேசினேன். ஆக, முஸ்லிம்களிடம் உரையாடலை தொடங்குவது என்பது மிக சுலபமான ஒன்றாகும்.


சமீபத்தில், நான் முஸ்லிம்களுக்கு குர்-ஆனைக் கொண்டு எப்படி சுவிசேஷம் சொல்வது என்பது பற்றி கிறிஸ்தவர்களுக்கு சில வகுப்புக்களை எடுத்தேன். குர்-ஆன் பைபிளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் சொல்லும் உயர்வான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, எப்படி உரையாடலை தொடருவது என்பது பற்றி கற்றுக்கொடுத்தேன். என்னுடைய இந்த பேச்சை ரிகார்ட் செய்து, எங்கள் திருச்சபை ஈராக் பகுதியில் இராணுவத்தில் (கப்பற்படையில்) வேலை செய்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அனுப்பினார்கள். இப்படிப்பட்ட பாடங்களை கற்றுக்கொண்டு, கப்பற்படையில் வேலை செய்யும் கிறிஸ்தவர்கள் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்துவிற்காக சில ஆத்துமாக்களை இரட்சிப்பிற்குள் நடத்தவேண்டும் என்பது என்னுடைய வேண்டுதலாக இருக்கிறது.


அதே சமயத்தில் அமெரிக்காவில் வாழும் ஐம்பது இலட்சம் முஸ்லிம்களுக்கு சத்தியத்தைச் சொல்வது நம் கடமையாகும்.  அவர்களோடு ஒரு நல்ல உரையாடலை துவக்கி நற்செய்தியைச் சொல்லவேண்டும். நற்செய்தியைச் சொல்ல இதை விட நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒன்றை மனதில் வைக்கவேண்டும், இப்படிப்பட்ட உரையாடலை தொடங்கும் போது, அவர்கள் உங்களிடம் ‘கிறிஸ்தவமும் பைபிளும் உண்மையானதல்ல’ என்று சொல்லக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதில்களைக் கொடுக்கவேண்டும், மேலும், இயேசுவின் பிரதிநிதியாக சத்தியத்தை அவர்களுக்குச் சொல்லவேண்டும்.


என்னொடு சேர்ந்து இந்த ஊழியத்தில் பங்கு பெற்றமைக்கு உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று கூடி இராஜாதி இராஜாவிற்காக ஊழியம் செய்வது மிகப் பெரிய மகிழ்ச்சியாகும்.


இப்படிக்கு, சத்தியத்திற்காக ஊழியம் செய்யும்


உங்கள் சகோதரன் ஆலன் ஸ்லெமன்


Author:  Alan Shlemon – A speaker for Stand to Reason

To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon

Translation: Answering Islam Tamil Team

 
 
 

Comments


bottom of page