முஹம்மது தற்கொலை முயற்சி செய்தாரா?
- TamilChristians Admins

- Mar 21, 2013
- 2 min read
முஹம்மது தற்கொலை முயற்சி செய்தாரா?
சாம் ஷமான்
பஸ்ஸாம் ஜவாதி என்ற இஸ்லாமிய அறிஞர்காப்பாற்ற முடியாத ஒன்றை காப்பாற்ற இன்னொரு முறை களத்தில் இறங்கியிருக்கிறார். முஹம்மது தற்கொலை முயற்சி செய்ததாக காணப்படும் புகாரி ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பி ஒரு கட்டுரையை பஸ்ஸாம் ஜவாதி என்பவர் மொழியாக்கம் செய்து பதித்துள்ளார்.
இந்த தலைப்பு பற்றி ஏற்கனவே அதிகமாக நாங்கள் பதில் கொடுத்து இருப்பதினால், சொன்னதையே மறுபடியும் எழுதாமல், நாங்கள் கொடுத்த மறுப்பு கட்டுரைகளின் தொடுப்புக்களை இங்கே தருகிறோம். இஸ்லாமிய தாவா புரியும் இந்த இஸ்லாமியர்கள் முஹம்மதுவிற்கு ஏற்பட்ட ஆன்மீக மற்றும் மனஉளைச்சல் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற தங்கள் இஸ்லாமிய மூல நூல்களுக்கு எதிராக அவர்களாகவே போர்க்கொடி கையில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த பதில்களை கீழே உள்ள தொடுப்புகளில் படியுங்கள்:
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது, ஷியா இஸ்லாமிய பிரிவினரின் ஆய்வு கட்டுரையின் தொடுப்பாகும். சுன்னி பிரிவினரின் மூல நூல்களில் காணப்படும் முஹம்மதுவின் தற்கொலை முயற்சிகளின் விவரங்கள் பற்றி இவர்கள் ஆய்வு செய்து, “ஆம், முஹம்மது உண்மையாகவே தற்கொலை முயற்சி செய்தார்” என்று அங்கீகாரம் அளிக்கின்றனர். அதனை இப்போது படியுங்கள்:
சுன்னி இஸ்லாமியர்களாக இருந்துக்கொண்டு, தங்கள் மூல நூல்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரங்கள் தவறானது என்றுச் சொல்லும், ஜவாதி போன்ற ஏமாற்று இஸ்லாமியர்களுக்கு, இந்த ஷியா இஸ்லாமியர்கள் சரியான மறுப்பை கொடுத்துள்ளார்கள். சுன்னி இஸ்லாமியர்கள் ஒரு உண்மையான ஹதீஸுக்கு என்னென்ன வரையறை வைத்துள்ளார்களோ, அவைகளின் அடிப்படையில் “முஹம்மதுவின் தற்கொலை முயற்சி” விவரங்களை ஆய்வு செய்து, அந்த தற்கொலை முயற்சி (சுன்னி பிரிவினரின் ஹதீஸ் வரையறையின்படி) உண்மை தான் என்று முடிவுரையாக கூறுகின்றனர். மேலும் இதே காரணத்தினால், மக்கள் சுன்னி இஸ்லாமை புறந்தள்ளி, எல்லாரும் ஷியா இஸ்லாமுக்கு வரவேண்டும் என்று அறுவுரை கூறுகிறார்கள்.
முஹம்மது வெறும் தற்கொலை முயற்சி செய்து, தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தார் என்று மாத்திரம் ஜவாதி அவர்கள் நினைக்கவேண்டாம், அதற்கும் மேலே சென்று, முஹம்மது ஒரு தீய சக்தியின் பிடியில் மாட்டிக்கொண்டு இருந்தார் என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு மனுஷனுக்கு பிசாசு பிடித்து இருந்தால், அவனிடம் எந்தெந்த அறிகுறிகள் காணப்படுமோ, அந்த அறிகுறிகள் அனைத்தும் முஹம்மதுவிடம் காணப்பட்டது. இதனைப் பற்றி அறிந்துக்கொள்ள கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:
ஜவாதி அவர்கள் மறுபடியும் இந்த தலைப்பு பற்றி ஒரு கட்டுரையை பதித்ததினால் நாங்கள் அவருக்கு நன்றி சொல்கிறோம். ஏனென்றால், ஏமாற்றுகின்ற இஸ்லாமிய தாவா அறிஞர்களுக்கு இன்னொரு முறை பதில் கொடுக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரும் மற்றவர்களைப் போல இன்னொரு ஏமாற்றுக்காரர் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது, மேலும், தம்முடைய நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக பொய்களைச் சொல்லி, தான் நம்பும் மூல நூல்களை வெட்கமில்லாமல் மறுக்கிறார்.
ஜவாதி அவர்கள் நேர்மையில்லாமல் நடந்துக்கொண்ட இதர எடுத்துக்காட்டுகளையும், அவருக்கு நாம் கொடுத்த மறுப்புக்களையும் எங்கள் மறுப்பு பக்கத்தில் காணலாம்.
உண்மை என்னவென்றால், இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி எழுத அவருக்கு ஞானம் போதாது, ஏனென்றால், அவருக்கு உண்மையும், நேர்மையும் முக்கியமில்லை என்பது அவரது கட்டுரைகளிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளலாம். அவருக்கு தெரிந்ததெல்லாம், எப்படியாவது அல்லாஹ்வையும், அவரது “இறைத்தூதரையும்” பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றவேண்டும், இதற்காக பொய்களைச் சொன்னாலும், ஏமாற்றினாலும் அவருக்கு பிரச்சனையில்லை.
திரு ஜவாதி அவர்களின் கட்டுரைகளினால் உண்டாகும் நன்மை என்னவென்றால், தர்க்கவியல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் “தர்க்கவாதங்களில் காணப்படும் குறைபாடுகள்” அனைத்தையும் இவரது கட்டுரைகளில் நாம் காணலாம். தர்க்கவியல் படிக்கும் மாணவனுக்கு தேவையான அனைத்துவித “தர்க்கவியல் எடுத்துக்காட்டுகள் (illustrations of all of the common logical fallacies)” அனைத்தும் இவரது கட்டுரைகளில் காணமுடியும். இஸ்லாமை போன்ற ஒரு தவறான மார்க்கத்தை காப்பாற்ற முயற்சி எடுக்கும் ஜவாதி போன்றவர்கள் செய்யும் அனைத்து தில்லுமுல்லுகளை (குறைபாடுகளை) நாம் அவரது கட்டுரைகளில் காணலாம்.
கர்த்தருக்கு சித்தமானால், டேவிட் உட் என்பவரின் “யார் முஹம்மதுவை கொன்றது?” என்ற வீடியோவிற்கு, ஜவாதி கொடுத்த பதிலுக்கு மறுப்புக்களை நாம் காண்போம். இந்த வீடியோவில் டேவிட் உட், குர்-ஆன் மற்றும் சுன்னி மூல நூல்களின் அடிப்படையில் முஹம்மதுவின் மரணம் பற்றிய விவரங்களை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, முஹம்மது நம்பியிருந்த தன் இறைவனாகிய அல்லாஹ் இவரை முழுவதுமாக கைவிட்ட நிலையில் மரித்ததாக நிருபித்துள்ளார் டேவிட் உட். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை காணும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடியோ இஸ்லாமுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக இருக்கிறது, முஸ்லிம்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது, இதனை ஜவாதி அவர்களும் மௌனமாக அங்கீகரித்துள்ளார்.
ஆங்கில மூலம்: Did Muhammad Contemplate Suicide?
© Answering Islam, 1999 – 2013. All rights reserved.


Comments